சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இளம்பெண்ணை ஒருதலையாக சவுரவ் காதலித்தாகக் கூறப்படுகிறது. இளம்பெண் மீதான காதல் மயக்கத்தில் சவுரவ், அவரிடம் இரட்டை அர்த்தத்தில் அலுவலக நேரத்திலேயே பேசி வந்தார். அதற்கு இளம்பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு உயரதிகாரிகளிடமும் முறையிட்டார். அதன்பிறகும் சவுரவ் தன்னுடைய செயலை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து இளம்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். காதல் டார்ச்சர் இந்த நிலையில் இளம்பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து அதிர்ச்சியும் கொடுத்தார். அதனால் இளம்பெண், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ஜி.எஸ்.டி அலுவலர் சவுரவ்வைக் கைது செய்தனர். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கைது செய்யப்பட்ட சவுரவ்வை விட புகார் கொடுத்த இளம் பெண் வயதில் மூத்தவர். அதனால் காதலுக்கு வயது தடையில்லை என்ற வாசகத்தை பெண்ணின் புகைப்படத்துக்குக் கீழே எழுதியிருக்கிறார் சவுரவ். ஆனாலும் அந்தப் பெண் எதையும் கண்டுக்கொள்ளவில்லை. மேலும் அலுவலக நேரத்திலேயே அந்தப் பெண்ணுக்கு ஆபாச செய்கை, இரட்டை அர்த்த பேச்சு, அவரின் போட்டோவை மார்பிங் செய்து அனுப்புவது போன்ற செயலில் சவுரவ் செய்து வந்திருக்கிறார். அதனால்தான் இளம்பெண், எங்களிடம் ஆதாரங்களுடன் புகாரளித்தார். அதன்பேரில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.டி ஆபீஸர் சவுரவ்வைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறோம்'' என்றனர். பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய தெரு நாய் - கோவையில் ஆச்சரியம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/crime/chennai-gst-officer-arrested-in-woman-harassment-case




