திருப்பூர், திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்கள் வைத்து வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டி திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புகழ்பெற்றதாக ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில் வைத்து பூஜை செய்யப்படும் பொருட்கள் சமூகத்தில் சில மாற்றங்களை நிகழ்த்துவதாக ஐதீகம் உள்ளது. குறிப்பாக பக்தர்களின் கனவில் தோன்றும் பொருட்கள் கோவிலில் சுவாமியிடம் உத்தரவு பெற்றப்பின் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 3 தேங்காய்கள் வைத்து வழிபாடு இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 10-ந்தேதி உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்ட மஞ்சள் பிள்ளையார், அருகம்புல், எலுமிச்சைப்பழம், வெற்றிலை பாக்கு நேற்று மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதியை சேர்ந்த இரும்புக்கடை வியாபாரியான சேர்மராஜா (வயது 50) முருகன் கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து அவர், கோவில் நிர்வாகிகளிடம், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் 3 தேங்காய்கள் வைத்து வழிபட வேண்டும் என்று முருகப்பெருமான் கனவில் வந்து கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து கோவிலில் உள்ள முருகப்பெருமான் முன்பு பூ போட்டு உத்தரவு கேட்கப்பட்டது. இதில் உத்தரவு கிடைத்ததும், ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இருந்து பொருட்கள் மாற்றப்பட்டு 3 தேங்காய்கள் வைக்கப்பட்டன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/worship-at-the-shivamalai-subramania-swamy-temple-by-placing-3-coconuts-in-the-lords-command-box




