ராய்ப்பூர், சத்தீஸ்கரில் 2013-ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் வழக்கில் 10 மாவோயிஸ்டுகளுக்கு என்.ஐ.ஏ. நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆந்திரம், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மவோயிஸ்டுகள் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது. இவர்களுக்கு எதிராக மத்திய அரசும், மாநில அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தன. இதன் விளைவாக மாவோயிஸ்டுகளின் ஆதிக் கம் ஒடுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தான் ஒரு சில மாவோயிஸ்டுகள் இருந்தார்கள். இப்போது அவர்களும் ஒடுக்கப்பட்டு விட்டனர். மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களில் கடந்த பல ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான போலீசாரும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டத்தில் ஜிராம்ஹட்டி என்ற இடத்தில் 2013-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி மாவோயிஸ்டுகள் மிகப்பெரியதாக்குதலை நடத்தினர். இதில் 27 பேர் கொல்லப்பட்டார்கள். இவர்களில் அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன் தினேஷ் படேல் மற்றும் சில தலைவர்களும் அடங்குவார்கள். மேலும் முன்னாள் மத்திய மந்திரி வி.சி.சுக்லாவும் படுகாயம் அடைந்து பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 150-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஈடுபட்டதாக தெரியவந்தது. இந்தவழக்கு ஜக்தால்பூர் என்ற இடத்தில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் 10 மாவோயிஸ்டுகளுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/29-died-in-2013-maoist-ambush-on-congress-convoy-now-10-get-death-penalty




