Fuld artikel
கடந்த ஆண்டு ஜம்மு & காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்ததையொட்டி, இந்திய அரசு பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்த நதியை நம்பிதான் பாகிஸ்தான் பஞ்சாப் மற்றும் சிந்து பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறது. இதனால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து என்பது பாகிஸ்தானுக்குப் பெரும் பின்னடைவு. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கடந்த வாரம் பேசியிருந்தார். பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்"பண மதிப்பிழப்பு நாயகர், நிதி அமைச்சரானால் இந்தியப் பொருளாதாரம் என்ன ஆகுமோ?" - ரவிக்குமார் MP இப்போது சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்திற்கு எதிராக பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார், பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற அமைச்சர் முசாதிக் மாலிக்... "அண்டை நாட்டின் பிரதமர் ஒருவரின் கட்டுப்பாட்டில் ஒரு தண்ணீர் குழாய் இருக்கிறது. பாகிஸ்தானுக்குள் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட ஓடவிட மாட்டேன் என்று அவர் கூறுகிறார். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 40 முதல் 50 சதவிகிதம் பேர் விவசாயத்தையே நம்பியிருக்கிறார்கள். அப்படி இருக்கையில், தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது நாட்டின் உணவுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும். யாரோ ஒரு நபர் இந்த நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு, 50 சதவீத வேலைவாய்ப்பு மற்றும் 25 சதவீத பொருளாதாரத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால், இங்கு நீதிக்கான ஒரு கேள்வியும் எழுகிறது. எங்களை நாங்களே பாதுகாத்துக் கொள்வோம். இதை நாங்கள் ஏதோ சும்மா அறிவிக்கவில்லை, மாறாக எங்கள் பங்கிற்கான தண்ணீரில் யாராவது கை வைத்தால், அந்தக் கையை வெட்டுவோம் என்பதை நாங்கள் ஏற்கெனவே நிரூபித்தும் காட்டியிருக்கிறோம். சிந்து நதி நீர்ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல... இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! - மத்திய அரசு சொல்வதென்ன? இப்போது மேல்படுகைப் பகுதிக்கு எல்லாம் கீழ்படுகைப் பகுதிக்குச் செல்லும் தண்ணீரை நிறுத்த உரிமை இருக்கிறதா என்ன? அதுவும் நமக்கு இடையே ஒரு ஒப்பந்தமே இருக்கிறது. அப்படி இருக்கும்போது இங்கு எப்படித் தண்ணீரை நிறுத்த முடியும்? இந்த வழக்கைத் தான் நாங்கள் நாளை முன்வைக்கப் போகிறோம். சர்வதேச அளவில் நீதி என்றால் என்ன என்பது இனி தீர்மானிக்கப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கீழ்படுகைப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்குத் தண்ணீருக்கான உரிமை இருக்கிறதா இல்லையா என்பது இனி தீர்மானிக்கப்படும்." முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor




