தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித், அவருடைய பெற்றோர்களும் காவலர்களுமான சரவணன் - கிருஷ்ணகுமாரி மற்றும் அவர்களது உறவினர் ஜெயபால் ஆகிய நான்கு பேரும் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டனர். மேலும், கவின் கொலை சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணை நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது, கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள், தடய அறிவியல் ஆவணங்கள் மற்றும் உயிரிழந்த கவினின் காதலி, பெற்றோர் உள்பட 83 சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் உள்ளிட்டவை அடங்கிய சுமார் 800 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்றம் கிளை இந்த நிலையில், தங்கள் மீது தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித் பெற்றோரான சரவணன், கிருஷ்ணகுமாரி மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்தும், ஜெயபால் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/judiciary/nellai-kavin-honour-killing-case-high-court-quashes-charge-sheet-against-surjiths-parents




