TNPL 2026 தொடரின் 21-வது லீக் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது கோவை கிங்ஸ். டாஸ் வென்ற கோவை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அவர்களின் தேர்விற்கு ஏற்ப பவுலர்களின் செயல்பாடு மிக கட்சிதம். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே சேப்பாக் சூப்பர் கில்லீஸின் பேட்டிங்கை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டனர். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் சொதப்பல், சூப்பர் கில்லீஸை பாதிப்பை நோக்கி நகர்த்தியது. மோகித் ஹரிஹரன் 13(9) ரன்களில் அவுட் ஆக, கேப்டன் ஜெகதீசனும் பவுலரின் கையிலேயே பூ மாதிரி கேட்சை கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ராம் அரவிந்த் பவுலர்களின் கண்ணில் கொஞ்ச நேரம் மண்ணைத் தூவி விட்டு சிக்சர்களையும், பவுண்டரிகளையும் அடித்துக் கொடுத்த வலு சேர்த்தார். இருந்த ஒரு நம்பிக்கையும் 63(32) ரன்கள் எடுத்து வெளியேறியது. அடுத்தடுத்து வந்தவர்களும் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். தினேஷ் ராஜ் தனது பங்கிற்கு 32(18) ரன்கள் எடுத்து தந்து பின் அவரும் டாட்டா சொல்லிச் செல்ல 19.3 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை இலக்காக வைத்தது. கோவை கிங்ஸ்-ன் பவுலர் ஆர்.எஸ்.அம்ரிஸ் 3 ஓவர்களுக்கு 22 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்த பலம் தந்திருந்தார். TNPL பின் களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியின் எஸ் ராதாகிருஷ்ணன் 3 சிக்சர் 3 பவுண்டரிகள் என ஒரு பவுசான ஓப்பனிங்கை கொடுத்து 38(18) ரன்களில் வெளியேறினார். பின் எஸ்.லோகேஸ்வரன் மற்றும் பி.சச்சினின் கூட்டணி 60 ரன்களை எடுத்து வலுபடுத்தியது. பின் பி.சச்சின் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ஷாருக்கான் 25(11) சிறிய மின்னல் ரன்களை காட்டி விட்டுச் செல்ல. கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை எடுத்து வெற்றி பெற்று "பிளே ஆஃப்" செல்வதற்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. சிறப்பாக பவுலிங் வீசிய ஆர்.எஸ் அம்ரிஸ் 'மேன் ஆஃப் தி மேட்ச்' பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://sports.vikatan.com/cricket/tnpl-2026-coimbatore-kings-bowling-shines-as-chepauk-super-gillies-falter-with-the-bat


