புதுடெல்லி, ஆகஸ்ட் 28ம்தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் டாலர் அதிகரித்து, 740.80 பில்லியன் டாலர் என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது. அதாவது கடந்த பிப்ரவரி 27-ந்தேதியுடன் முடிந்த வார நிலவரப்படி, 728.494 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.68 லட்சம் கோடி) இருந்தது. பின்னர் போர் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றத்தால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கி டாலர் விற்பனையில் ஈடுபட்டதன் காரணமாக அன்னிய செலாவணி கையிருப்பு சரிந்தது. புதிய நிதி வரவு பின்னர் ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட கடும் சரிவுக்கு மத்தியில், கடந்த ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி சலுகை அடிப்படையிலான அன்னிய செலாவணி மாற்றுத் திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு அதிகரித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் 132 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான புதிய நிதி வரவு ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 28-ந்தேதியுடன் நிறைவடைந்த வார நிலவரப்படி நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 740.803 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.69 லட்சம் கோடி) அதிகரித்து விட்டது. இதில் முக்கிய பங்களிப்பு செய்யும் வெளிநாட்டு கரன்சி சொத்து மட்டுமே 600.67 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதன் மூலம் அன்னிய செலாவணி கையிருப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. தங்கத்தின் மதிப்பு இதைப்போல ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பும் 2.191 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்து 116.409 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதற்கிடையே சர்வதேச நிதியத்தில் உள்ள இந்திய தொகுப்பு கடந்த 28-ந்தேதி நிலவரப்படி 11 மில்லியன் டாலர் அளவுக்கு சரிந்து, 4.914 பில்லியன் டாலராக உள்ளது. இந்த தகவல்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/indias-forex-reserves-rise-by-1147-billion-to-hit-record-high-of-74080-billion-as-of-august-28




