சென்னை, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். 24 மணிநேரத்தில் 8 கொலைகள் இது தொடர்பாக தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைகள் நடந்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் செயலிழந்துபோயுள்ளது என்பதற்கு இந்தக் கொலைகள்தான் சாட்சி. காவல்துறை செயல்படுகிறதா? ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ்நாட்டின் Growth Rate-ஐ உயர்த்துவார்கள் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, தினமும் Crime Rate -ஐ உயர்த்தி தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறது தவெக அரசு. தமிழ்நாட்டில் மக்களின் பாதுகாப்பு அன்றாடம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும்போது, என்ன செய்துகொண்டிருக்கிறது தமிழ்நாடு அரசு? தமிழ்நாட்டில் காவல்துறை செயல்படுகிறதா? இல்லை அதுவும் முதல்-அமைச்சரைப் போல் ஓய்வில்தான் இருக்கிறதா? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/8-murders-in-just-the-last-24-hours-law-and-order-has-completely-collapsed-mp-kanimozhi




