சென்னை, தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 'ஆம்பள', 'தனி ஒருவன்', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான 'மீசையை முறுக்கு' திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'மீசையை முறுக்கு 2' படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் படம் சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். செப்டம்பரில் ரிலீஸ்? தற்போது 'மீசையை முறுக்கு 2' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள காட்சிகளும் படமாக்கப்பட்டு, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முழுமையாக நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், 'மீசையை முறுக்கு 2' திரைப்படத்தை செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசர், பாடல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு முன்னதாக வெளியான 'மீசையை முறுக்கு 2' படத்தின் டீசர் மற்றும் 'ஆரா 10/10', 'பப்பாளி பழமே' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/release-update-for-the-movie-meesaya-murukku-2-starring-hiphop-adhi




