சென்னை, தமிழக மீனவர்களின் படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாககூறி இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், படகுகளுடன் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிக அளவில் நடக்கின்றன. இதுதவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை மயிலட்டி துறைமுகம், மன்னார், வவுனியா, காங்கேசன்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் பல படகுகள் இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்டு உள்ளன. மேலும் பல படகுகள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இலங்கையில் மட்டும் தமிழக மீனவர்களின் 200-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. படகுகள் உடைப்பு இதற்கிடையே இலங்கை மயிலட்டி துறைமுகத்தில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்ட தமிழக மீனவர்களின் பல்வேறு படகுகளை பொக்லைன் எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த கொந்தளிப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் தேவதாஸ் கூறுகையில், மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் படகுகளை இலங்கை அரசு தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்காமல் அரசு டைமையாக்கி அதை பொக்லைன் எந்திரம் மூலம் உடைத்து வருவது கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, இலங்கை பிரதமரை நேரில் சந்தித்து அரசுடைமையாக்கப்பட்ட அனைத்து படகுகளையும் மீட்டு தமிழகம் கொண்டு வந்து மீனவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/sri-lankan-navy-dismantling-confiscated-boats-belonging-to-tamil-nadu-fishermen




