சென்னை, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் (ஐ.ஓ.பி)-ல் 250 உள்ளூர் வங்கி அதிகாரி காலிப்பணியிடங்களுக்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விவரம் வருமாறு: பணி: உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer) காலியிடங்கள்: 250 (தமிழ்நாடு -100) பணியிடங்கள்: தமிழ்நாடு, கர்நாடகம், மராட்டியம், குஜராத் சம்பளம்: மாதம் ரூ.48,480 - 85,920 தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிபுரிய விரும்பும் மாநிலத்தின் அலுவலக மொழியில் பேசி, எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: 1.8.2026 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழித்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள், இடம் குறித்த விவரம் அடங்கிய நுழைவுச்சீட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, மதுரை, திண்டுக்கல், சேலம், கோவை, வேலூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, தஞ்சாவூர், கரூர், கடலூர், ராமநாதபுரம் விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு ரூ.175. இதர அனைத்து பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று(24.08.2026) கடைசி நாளாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/education-and-employment/250-vacancies-in-indian-overseas-bank-today-is-the-last-day-to-apply




