சென்னை, சென்னை தியாகராய நகர் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது கார்த்தி சிதம்பரம் கூறியதாவது;- “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். திருச்சி, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிகார மையங்கள் செயல்பட வேண்டும். அனைத்து அதிகார மையங்களும் சென்னையில் மட்டுமே இருக்கக் கூடாது என்பது எனது கருத்து. அரசு துறைகளின் அலுவலகங்களை திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் அமைக்க வேண்டும். அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு பயணம் செய்து கொள்ள முடியும். விமான நிலைய வசதிகள் இருக்கின்றன. எனவே எல்லா அலுவலகங்களும் சென்னையில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் அதிகார மையங்கள் இருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, சட்டப்பேரவையே ஒரு வருடத்திற்கு 3 முறை கூடுகிறது என்றால், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஊர்களில் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று கருதுகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-should-be-power-centers-in-other-parts-of-tamil-nadu-as-well-karti-chidambaram




