கோவில்பட்டியை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி பிரிட்டனின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடை பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர் தீப்பெட்டி கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சுரேஷ்குமார் மற்றும் ராஜா முத்துப்பாண்டி என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த ராஜா முத்துப்பாண்டிதான் தற்போது வெள்ளிப்பதக்கம் வென்றவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c4g321y77qlo




