சென்னை, முதல்-அமைச்சர் விஜய் காவலர் தினத்தையொட்டி காவல்துறையினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- காவலர் தினம் 1859-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாவட்டக் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் காவலர் நாளை முன்னிட்டு, சமூகத்தில் அமைதி நிலவிடவும், சட்டத்தின் ஆட்சி நிலைபெறவும் தன்னலமின்றிப் பணியாற்றிவரும் காவல்துறையினர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த காவலர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் போற்றத்தக்கவை நமது மாநிலத்தில், குற்றங்களைத் தடுத்து, சட்ட ஒழுங்கைப் பேணுவதுடன், ஆபத்தான சூழல்களிலும், பேரிடர் காலங்களிலும் மக்களின் உயிர், உடைமை மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் துணிவுடன் நின்று களப்பணி ஆற்றிவரும் காவல்துறையினரின் வீரமும் தியாகமும் என்றும் போற்றத்தக்கவை. காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைத்து, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அவர்களின் பணித்திறனை மேம்படுத்தி, காவலர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை உறுதிசெய்வதற்கும் நமது அரசு முன்னுரிமை அளிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-bravery-and-sacrifice-of-the-police-will-never-be-forgotten-chief-minister-vijay-extends-police-day-greetings




