பண்ருட்டி, காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை ஏ.சி. மெக்கானிக் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சின்னபுறங்கனி கிராமத்தை சேர்ந்தவர் சரவணமூர்த்தி மகன் சந்தோஷ்(வயது 25). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இதற்காக சென்னையிலேயே தங்கியுள்ள அவர், அவ்வப்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்வார். காதல் விவகாரம் இவரும், பண்ருட்டி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளம்பெண்ணும் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்தனர். அந்த இளம்பெண், பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் விற்பனையாளராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் இளம்பெண் வீட்டிற்கு தெரிந்ததும், பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த ஓராண்டாகவே இளம்பெண், சந்தோஷிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். காதலியிடம் கடும் வாக்குவாதம் இந்த நிலையில் நேற்று இளம்பெண் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் பணியில் இருந்தார். மதியம் 12.30 மணியளவில் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் கம்ப்யூட்டரில் மருந்தின் இருப்பு விவரங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த சந்தோஷ், 6 ஆண்டுகளாக காதலித்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பது ஏன்?, பேசுவதை நிறுத்தியது ஏன்? என்று கேட்டு காதலியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து இளம்பெண்ணை சரமாரியாக வெட்டினார். இதில் அவரின் கழுத்து, கை, உடல் பகுதியில் 6 இடங்களில் வெட்டு விழுந்தது. இளம்பெண் அலறல் இதனால் வலி தாங்க முடியாமல் இளம்பெண் அலறினார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சந்தோஷை விரட்டிப்பிடித்து கத்தியை பிடுங்கிவிட்டு தர்ம அடி கொடுத்தனர். மேலும் இளம்பெண்ணை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து, சந்தோஷை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-mechanic-commits-violent-act-after-refusal-to-marry-following-six-year-relationship-tragedy-befalls-young-woman




