சென்னை, தி.நகர் விடுதியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சினிமா வினியோகஸ்தர் கைது செய்யப்பட்டார். சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (வயது 38 இவர் தி.நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி வந்தார். சம்பவத்தன்று அலெக்சாண்டரின் நண்பர் ஜெய் என்பவர் அந்த விடுதிக்கு வந்தார். கூடவே ஒரு இளம்பெண்ணையும் அழைத்து வந்தார். பலாத்காரம் செய்ய முயற்சி அந்த பெண்ணை லாட்ஜில் பேசிக்கொண்டு இருக்குமாறு கூறிவிட்டு நண்பர் ஜெய் சென்றுவிட்டார். இந்த நிலையில் திடீர் என்று அலெக்சாண்டர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த பெண் தனது தோழிக்கு போன் செய்து அழுது கொண்டே நடந்ததை கூறி உதவிக்கு கூறினார். பதறிப்போன தோழி உடனே லாட்ஜுக்கு வந்து அலெக்சாண்டரிடம் இதுபற்றி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அலெக்சாண்டர் 2 பெண்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியதாக தெரிகிறது. சினிமா வினியோகஸ்தர் கைது இதுபற்றி அந்த 2 பெண்களும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு போன் செய்து நடந்ததை கூறினர். சமூக நலத்துறையினர் பாண்டி பஜார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி அலெக்சாண்டரை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நண்பருக்கு வலைவீச்சு அவரை வருகிற 11-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதை அடுத்து அலெக்சாண்டர் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே இளம்பெண்ணை அழைத்து வந்த ஜெய்யை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் சினிமா ஆசைக்காட்டி இளம்பெண்ணை அழைத்து வந்தாரா? அல்லது வேறு காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/movie-distributor-arrested-for-attempting-to-rape-young-woman-in-hotel



