Fuld artikel
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor
Udgivet
25. jun. 2026
Kildenavn
Vikatan
Land
India
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor

இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் முழு அளவிலான ஹோலோகிராம் உருவம் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் காணொளி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் எல்லாம் இடிந்து விழுந்திடும் என்று பயத்துடன் வாழும் எங்கள் பிரச்சனையை அதிகாரிகள் கண்டுக்கவே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள் பட்டியல் பழங்குடியரான இருளர் சமூக மக்கள். கூரை பெயர்ந்து விழும் வீடுகள் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணை அருகில் சோக்காடி செல்லும் வழியில் வசித்து வந்த 21 இருளர் குடும்பத்தினருக்கு கடந்த 2005-ல் மத்திய மாநில அரசு இணைத்து கொண்டு வந்த திட்டத்தின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுத்தது. தற்போது அந்த வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் புனரமைத்து தாருங்கள் என்று அங்கு வசிககும் மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். பட்டா கொடுத்த இடத்தில் குடிசை கட்டி வாழும் மக்கள் இது சம்பந்தமாக பலமுறை கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, "இருபது வருசத்துக்கு முன்னாள அரசாங்கம் கட்டி கொடுத்த வீடுதான். ஆனால், சமீபகாலமா கான்கிரீட் கூரை பெயர்ந்து கீழே விழுகிறது. அதன் உள்ளேயுள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது, மழை வந்துவிட்டால் வீட்டின் உள்ளே இருக்க முடியாது, அருவி போல தண்ணீர் கொட்டுகிறது. அதனால் வீட்டில் வசிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது. வீட்டின் நிலை நாங்கள் பகல் முழுதும் காடுகளுக்கு சென்று கடினமாக உழைத்து வந்தாலும் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து சாய முடியவில்லை. அதைவிட கொடுமையாக கைக் குழந்தைகள், பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வீட்டுக்குள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. சீக்கிரம் சீர் செய்து தரும்படி மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை எதுவும் நடக்கவில்லை, , இந்த திட்டத்தில் மேலும் 15 வீடுகள் கட்டித்தருவதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டது, ஆனால், இதுவரை வீடு கட்டிக்கொடுக்கவில்லை, அந்த இடத்தில் ஓலை கூரை போட்டு ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போது 21 வீடுகளையும் மராமத்து செய்து தரவும், பட்டா கொடுக்கப்பட்ட 15 பேருக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்" என்றனர் மாவட்ட நிர்வாகமும், தமிழக முதல்வரும் இவர்களின் பிரச்சனையை தீர்ப்பார்களா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

நீலகிரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 48 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஒரு மாணவரும் சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில் "20 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை" என்று நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிபிசியிடம் தெரிவித்தார். இதற்கு என்ன காரணம்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் உள்ள காரைத்திட்டு கிராமத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டை விட்டு வெளியேச் சென்றிருந்தார். வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தந்தை மகளை தேடி சென்றார். அந்த வழியாக சென்றவர்கள் 'உங்கள் மகள் இந்த வழியாகத்தான் சென்றார்' என்று சொன்ன தகவலின் பேரில் சந்தேகமடைந்து, ஒரு மொட்டை மாடி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கு சிறுமி அலங்கோலமாக மயக்க நிலையில் கிடந்தார். இதைக் கண்டு பதறிய அவரது தந்தை தன்னுடைய மகளை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரைத்திட்டு பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கியிருந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன் (20), அஜய் (27) இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது கைது செய்யப்பட்ட மகேஸ்வரன் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அஜய் மரக்காணத்தில் உள்ள இறால் பண்ணையில் கூலிவேலை செய்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை தெரிவித்த தகவலில், `மகேஸ்வரன், இவரது நண்பர் அஜய் இவர்கள் இருவரும் 14 வயதான 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி அவரது வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக மகேஸ்வரனின் வீட்டு மொட்டை மாடிக்கு தூக்கி சென்று, அங்கு இருவரும் மாறி, மாறி அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். போராடிய அந்த சிறுமியை இருவரும் தலையில் ஒரு கட்டையால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது." என்றனர் தருமபுரி: சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Hold dig informeret med de seneste nyheder fra pålidelige kilder