சென்னை, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நிகழ்வுகள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சட்டமன்றத்தில் இன்று நேரலை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது;- “என்னிடம் 70 வயது முதியவர் ஒருவர் சொன்ன விஷயத்தை கூறுகிறேன். ‘இப்போதெல்லாம் நாங்கள் வீட்டில் சீரியல் பார்ப்பதில்லை, சட்டமன்ற நேரலையைதான் பார்க்கிறோம். சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை என் மனைவி, பேத்தி என அனைவரும் அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தற்போது பயம் எல்லாம் நீங்கி சந்தோஷமாக இருக்கிறோம். இன்றைக்கு எங்களுக்கு ஒரு பிள்ளையாக நம்முடைய முதல்-அமைச்சர் இருக்கிறார்’ என்று அந்த முதியவர் என்னிடம் கூறினார். தமிழ்நாட்டில் முதல் முறையாக நமது முதல்-அமைச்சர் விஜய்தான் தைரியமாக சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி அளித்திருக்கிறார்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/people-say-they-dont-watch-tv-serials-instead-they-watch-the-live-broadcast-of-the-assembly-proceedings-says-minister-n-anand




