சென்னை லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் பங்கேற்காதது ஏன்? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டியின்போது பதிலளித்து உள்ளார். தமிழக முதல் அமைச்சர் விஜய், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 10-ந்தேதி இரவு லண்டன் புறப்பட்டு சென்றார். 6 நாள் அரசு முறை பயணத்திற்காக லண்டன் சென்ற முதல் அமைச்சர் விஜய்க்கு தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து 12-ந்தேதி முதல்-அமைச்சர் விஜய், தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் அமைப்பதற்காக, உலகப்புகழ் பெற்ற சில்வர்ஸ்டோன் பந்தய களத்தில் உள்ள உள்கட்டமைப்பு, பந்தய சுற்றுப்பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போட்டிகளை வணிக ரீதியாக நடத்தும் முறைகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேசையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொழில் முதலீடு அதன் தொடர்ச்சியாக 2 நாட்கள் முதல்-அமைச்சர் விஜய், பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்தார். சுமார் ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொண்ட லண்டன் பயணத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உடன் செல்லவில்லை. இது சர்ச்சையானது. எதிர்க்கட்சியினர் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர். 2 வெளிநாடுகள் இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தொழில்துறை அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை. அது வெளியில் கூற முடியாது. நான்கு நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனை என்னிடம் கூறினார். முதல்-அமைச்சரிடமும் கூறினார். இதுபோன்று ஒவ்வொரு விசயத்திற்கும், எதிர்க்கட்சிகள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்து கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அந்த நேரத்தில் அவர்கள் ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலை. அதனால் அவரால் பயணம் செய்ய முடியவில்லை. தவிர வேறெதுவும் இல்லை. அதற்கு முன்பு 2 வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியிருக்கிறார். தொழில்துறை அமைச்சரை அழைத்து செல்லாததில் என்ன உள்ளது? அவர் எங்களுடைய சகோதரிதான். போலி பிரசாரம் லண்டன் பயணத்தில் தொழிற்சாலைகளின் செயலாளர்கள் வந்திருந்தனர். மற்ற எல்லா அதிகாரிகளும் வந்திருந்தனர். தொழில்துறை செயலாளர் வீட்டில் திருமண நிகழ்வு என நினைக்கிறேன். அதனால், அவர் வரவில்லை. போலி பிரசாரம் மேற்கொண்டால், அது மக்களிடம் எதிர்மறையை ஏற்படுத்தும் என்று தி.மு.க. செயல்படுகிறது என கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/why-industry-minister-skipped-london-trip-adhav-arjuna-interview




