சேலம், சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. பிருந்தாவன் சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் வாகனங்கள் ஓமலூர் பிரதான சாலையில் இருந்து வழக்கம்போல் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும். வெளியே வரும் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. மருத்துவமனை பகுதிக்குள் சென்ற வாகனங்கள் எஸ்.கே.எஸ். மருத்துவமனை சாலை 7-வது கிராஸ், எல்.ஐ.சி. காலனி சாலை வழியாக வெளியே வந்து ஓமலூர் பிரதான சாலையை அடைய வேண்டும். எல்.ஐ.சி. காலனி, 7-வது கிராஸ் சாலை மற்றும் வசந்தம் ஓட்டல் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் எஸ்.கே.எஸ். சந்திப்பு வழியாக மட்டுமே செல்ல வேண்டும். இதற்காக எல்.ஐ.சி. காலனி சாலை ஒருவழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பிருந்தாவன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி 7-வது கிராஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். இந்த வழியாக செல்லும் வாகனங்கள் நேரடியாக ஓமலூர் பிரதான சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த தகவலை கலெக்டர் இளம்பகவத் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/traffic-diversion-in-salem-city-starting-tomorrow




