சென்னை, தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- முன்னாள் குடியரசுத் தலைவர், ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு தினத்தில் நாட்டிற்காகவும், மாணவர்களுக்காகவும் அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம். இலட்சியப் பாதை டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நாட்டின் பாதுகாப்புத் துறையில் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற மாமனிதர். மேலும் எளிமை, நேர்மை, தேசப்பற்று மற்றும் மாணவர்கள் மீதான அளவற்ற நம்பிக்கையால் இளம் தலைமுறைகளை ஊக்குவித்தவர்."கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்" என்ற அவரது இலட்சியப் பாதை என்றும் நமக்கு வழிகாட்டும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/we-will-always-cherish-the-achievements-of-abdul-kalam-vanathi-srinivasan




