கோலாலம்பூர், இந்திய கடற்படையின் செயல்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை கப்பலான ‘ஐ.என்.எஸ். மைசூர்’ மலேசியாவுக்கு சென்றுள்ளது. அங்கு மலேசிய கடற்படையுடன் இணைந்து, ‘சமுத்ர லட்சமணா’ என்ற கூட்டு கடற்படை பயிற்சியின் 4-வது பதிப்பில் பங்கேற்றது. இந்த கூட்டு பயிற்சியானது மலேசியாவின் லுமுத் நகரில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி, 12-ஆம் தேதி வரை 4 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. அனுபவங்கள் பகிர்வு இந்த பயிற்சியானது, இந்திய மற்றும் மலேசிய கடற்படையினர் பல்வேறு வகையான தொழில்முறை மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற துறைமுக கட்டத்தின் போது, இரு நாட்டு கடற்படை அதிகாரிகளும், பணியாளர்களும் நேரில் சந்தித்து தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டனர். சமுத்ர லட்சமணா மேலும், கடல்சார் பாதுகாப்பில் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன், இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர புரிதலையும் மேம்படுத்தி கொண்டனர். இரு நாட்டு உறவு பலப்படும்இந்த ‘சமுத்ர லட்சமணா’ கூட்டு பயிற்சியானது, இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையிலான கடற்படை ஒத்துழைப்பின் வளர்ந்து வரும் ஆழத்தையும், அதன் முதிர்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. கூட்டு கடற்படை பயிற்சி வலுவான கூட்டுறவு இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையே மேம்பட்ட செயல்பாட்டுப் புரிதலை கட்டியெழுப்புவதிலும், கடல்சார் பாதுகாப்பில் வலுவான கூட்டுறவை ஏற்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/naval-exercise-in-malaysia-ins-mysore-participation




