புதுடெல்லி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்கால கூட்டதொடர் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 13-ந் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று முன்தினம் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கூட்டத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதைப்போல நேற்று காலை ஊடகங்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசு கையிலும் அவை நடவடிக்கைகள் நாட்டுக்கு பயன் உள்ளதாக இருக்க வேண்டும் என கேட் டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. மாநிலங்களவையில் பதவி ஏற்காத புதிய உறுப்பினர்கள் சிலர் பதவியேற்றனர். அதனைத்தொடர்ந்து இரு அவை களிலும் மறைந்த கத்தாரின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி மற்றும் மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. எதிர்க்கட்சியினர் அமளி பின்னர் மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கேள்விநேரத்தை தொடங்கினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நீட் வினாத்தாள் கசிவு, ராமர் கோவில் நன்கொடை கையாடல் விவகாரம் மற்றும் கரப்பான் பூச்சி கட்சியினர் மீதான அடக்குமுறைகள் பற்றி பேச வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அதனை மறுத்து, அவையில் கண்ணியத்தை கடைப்பிடிக்குமாறு கேட் டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தனர். பதாகைகளையும் கொண்டு வந்தனர். இதனால், இரு அவைகளும் நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 2-வது நாளாக கூடிய நாடாளுமன்றம் இந்தநிலையில், நாடாளுமன்றம் இன்று 2-வது நாளாக காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை முன்னிறுத்தி அமளியில் ஈடுபட்டன. டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனைக் கண்டிக்கும் வகையில், அவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டன. இதன்பின்னர், 12 மணிக்கு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது, டெல்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியது தொடர்பாக மாநிலங்களவையில் எம்.பி.க்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. நாள் முழுவதும் ஒத்திவைப்பு இந்நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாளை (ஜூலை 22) காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் 2வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/நாடாளுமன்றத்தில்-எதிர்க்கட்சிகள்-கடும்-அமளி-இரு-அவைகளும்-நாளை-வரை-ஒத்திவைப்பு




