புதுடெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு அக்.16-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கும், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு இடத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பதவியில் உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் நவ. 25-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மேலும், மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் அக்.16-ம் தேதி நடைபெற உள்ளது. அக்டோபர் 16 -ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/elections-for-12-rajya-sabha-seats-on-october-16




