கொல்கத்தா, இந்திய ஜூனியர் கிரிக்கெட் வீரர் பெங்காலை சேர்ந்த ரோகித் யாதவ். சுழற்பந்து வீச்சாளரான இவர் கடந்த ஜூலை மாதம் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கை சென்று விளையாடிய போது அதில் இடம் பெற்றிருந்தார். இலங்கைக்கு எதிரான இளையோர் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்த மாத இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணியுடன் மோதும் இந்திய அணிக்கும் தேர்வாகி இருந்தார். இதற்கிடையே, ரோகித் யாதவ் வயது மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் அவரது பிறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்த போது, வயது தொடர்பான முரண்பாடு வெளிச்சத்திற்கு வந்தது. 2007, 2009 மற்றும் 2010 என வெவ்வேறு பிறந்த ஆண்டுகளை கொண்ட மூன்று பிறப்பு சான்றிதழ் அவரிடம் இருந்தன. இதன் மூலம் அவர் வயது பிரிவு போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை இழந்துள்ளார். தகவல் அறிந்த இந்திய கிரிக்கெட் வாரி யம், வயது குறித்து தவறான தகவல்களை அளித்து ஏமாற்றிய அவருக்கு 2 ஆண்டு தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/young-indian-cricketer-banned-for-age-fraud




