கண்ணூர், முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார், தண்டவாளத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் சிக்கிய கார் கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் ரெயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டு கொண்டிருந்தது. அப்போது அந்த பாதையில் வந்த கார், தண்டவாளத்தை கடந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது காரின் முன்சக்கரங்கள் தண்டவாளத்தின் பள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து ஓட்டுநர் காரை அங்கிருந்து நகர்த்த முயன்றபோது, காரில் இருந்து புகை வெளியேறியது. அந்த நேரத்தில் திடீரென ரெயில் வருவதற்கான எச்சரிக்கை மணி ஒலித்ததால் காருக்குள் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். கார் மீட்பு இதனை கவனித்த ரெயில்வே அதிகாரி, தண்டவாளத்தில் கார் சிக்கியிருப்பது குறித்து தகவல் தெரிவித்து ரெயிலை முந்தைய நிலையத்திலேயே நிறுத்துமாறு கூறியுள்ளார். இதற்கிடையே பொதுமக்கள் காரை தண்டவாளத்தில் இருந்து அகற்ற முயன்றனர். ஆனால், அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை. பின்னர், பொதுமக்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார், கிரேன் உதவியுடன் தண்டவாளத்தில் சிக்கியிருந்த காரை அங்கிருந்து அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/car-trying-to-cross-railway-gate-gets-stuck-on-tracks-passengers-fortunately-survive




