ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 32 வயதான கிரண் என்ற பெண்ணும், 22 வயதான பர்வேஷ் என்ற இளைஞரும், வாடகை வீட்டில் கடந்த 2 மாதங்களாக லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்தனர். இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் அக்கம்பக்கத்தினரிடம் தங்களை கணவன்-மனைவி என்றே கூறி வந்துள்ளனர். இந்நிலையில், பர்வேஷ்-கிரண் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் நேற்று அவர்களை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீடு பூட்டப்பட்டு கிடப்பதைக் கண்டார். மேலும், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் மண் புதிதாக தோண்டப்பட்டது போல் இருந்துள்ளது. அருகில் சென்று பார்த்தபோது, ஒரு பெண்ணின் கை மண்ணுக்குள் இருந்து வெளியே நீட்டிக் கொண்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அங்கு வந்து மண்ணுக்குள் புதைந்திருந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்தனர். அப்போது அது கிரணின் உடல் என்பது தெரியவந்தது. அந்த உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரணுடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த பர்வேஷ், சுமார் 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு கிரணை கொலை செய்துவிட்டு அவரது உடலை வீட்டுத் தோட்டத்தில் புதைத்துள்ளார் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. தற்போது தலைமறைவாக இருந்து வரும் பர்வேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/young-man-kills-live-in-partner-and-buries-her-in-the-garden-sensation-in-rajasthan




