20-வது ஆசிய விளையாட்டுப் போட்டி ஜப்பான் நாட்டின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி 28 தங்கப் பதக்கங்களையும், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை அலங்கரித்தது. ஆனால், இந்த முறை 9-வது நாளில் பதக்க பட்டியலில் 12-வது இடத்தில் இருப்பது விளையாட்டு ஆர்வலர்களை சோர்வடைய வைத்துள்ளது. கபடி விளையாட்டில் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் தங்கப் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துவிடுவார்கள் என்ற நாட்டு மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த 26-ந்தேதியன்று நடந்த ஆண்கள் கபடி இறுதிப் போட்டியில் 40-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை வென்று நமது அணி தங்கப் பதக்கத்தை வென்றுவிட்டது. அதேபோல பெண்கள் பிரிவிலும் 37-34 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை இந்தியா கையில் ஏந்தியிருக்கிறது. ஆக, ஆண்கள் போட்டியிலும், பெண்கள் போட்டியிலும் ஈரான்தான் நமக்கு சரிநிகர் போட்டியாளராக இருந்து, 'சபாஷ், சரியான போட்டி' என்று சொல்லக்கூடிய அளவில் களத்தில் மல்லுக்கட்டியிருக்கிறது. 1990-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான கபடி போட்டி முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கான கபடி விளையாட்டு 2010-ம் ஆண்டு சீனாவில் நடந்த போட்டியில் அறிமுகமானது. இதுவரை நடந்த 10 ஆண்கள் போட்டிகளில் இந்தியா 9 முறை தங்கப் பதக்கங்களைப் பெற்று இருக்கிறது. ஒரே ஒருமுறை மட்டும், அதாவது 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த போட்டியில் அரையிறுதியில் ஈரானிடம் சரணடைந்து வெண்கலப் பதக்கத்தோடு நாடு திரும்பியது. பெண்கள் அணியும் இதுவரை நடந்த 5 போட்டிகளில் 4 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று இருக்கிறது. 2018-ம் ஆண்டு நடந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரானிடம் தான் மகளிர் அணி தோல்வியைத் தழுவியது. இந்த ஆண்டு நடந்த கபடி போட்டியில் ஆண்கள் அணியும், பெண்கள் அணியும் வாகை சூடி, தங்கப் பதக்கங்களை வசப்படுத்தியுள்ளன. வீரம் விளைந்த தமிழ்நாடுதான் கபடி விளையாட்டின் தாய் பூமி. 1960-களில் சடுகுடு என்று அறியப்பட்ட இந்த போட்டியை தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் தமிழர் விளையாட்டு என்று பறைசாற்றியதோடு, ஊர் ஊராக, குறிப்பாக ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கொண்டு சேர்க்க அரும்பாடுபட்டார். கபடி விளையாட்டை ஆசிய விளையாட்டுப் போட்டியில் சேர்க்க மூல காரணமாக இருந்தவர் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான இந்திய கபடி அணியில் ஒரு வீரர்கூட இடம்பெறவில்லையே என்பது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. 45 நாடுகள் பங்கேற்றுள்ள நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 நாடுகள் மட்டுமே கபடி பிரிவில் பங்கேற்று இருக்கின்றன. எனவே, இந்தியா ஒவ்வொரு நாட்டிலும் காட்சிப் போட்டிகளை நடத்தி, அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெரும்பாலான நாடுகளை கபடி போட்டியில் பங்கேற்கச் செய்யவேண்டும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/tamilaga-veerargal-illaiye




