பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ். இந்த ஆண்டு பிரிக்ஸின் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளது. இதையொட்டி வருகிற 12, 13 தேதிகளில் இந்தியா புதுடெல்லியில் பிரிக்ஸ் மாநாடு நடக்கவுள்ளது. > சீன அதிபர் ஷி ஜின்பிங், > ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், > தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசா, > ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், மோடி - ஜி ஜின்பிங்"எங்கள் கட்சியை வெற்றி பெற செய்தால் $5,000 தருகிறேன்" - அமெரிக்க மக்களுக்கு ட்ரம்ப் தூண்டில்! > எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, > எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது, > இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, > ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், > பிரேசில் வெளியுறவுத் தலைவர் மௌரோ வியெய்ரா. இவர்கள் பிரிக்ஸின் உறுப்பு நாடுகளிலிருந்து டெல்லியில் நடக்கவிருக்கும் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தலைவர்களின் லிஸ்ட். இதைத் தாண்டி, இன்னும் பல நாடுகளிலிருந்து தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்தப் பிரிக்ஸ் மாநாடு மிகவும் முக்கியமான நேரத்தில் நடைபெறுகிறது. ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கூடவே, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது அமெரிக்கா. ஆனால், இந்தப் பொருளாதாரத் தடைகளுக்கு எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளது சீனா. ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக அமெரிக்காவும், மத்திய கிழக்கு நாடுகளும் குற்றம் சாட்டுகின்றன. ஆக, இந்த மூன்று நாடுகளின் அதிபர்களும் இந்த மாநாட்டில் ஒன்றாகக் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மோடி - புதின் 'புதின் முயற்சி, தென்னாப்பிரிக்கா என்ட்ரி, மன்மோகன் சிங் யோசனை' - 'BRICS' கதையைப் பகிர்ந்த காங்கிரஸ் இன்னொரு பக்கம், ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது இந்தியா. மேலும், ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தத்தை நோக்கி நகர்வதுபோலத் தெரிகிறது. அடுத்ததாக, 2019-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வருகிறார் ஜி ஜின்பிங். இது இந்தியா-சீனா உறவில் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். இப்படிப் பல்வேறு முக்கிய உலகச் சூழலுக்கு இடையில் இந்தியாவின் தலைமையின் கீழ், இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு நடக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/brics-summit-2026-why-india-leadership-matters-now




