சென்னை தமிழக சட்டப்பேரவையை மாலை நேரத்தில் நடத்துவது பற்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பதில் அளித்துள்ளார். தமிழக சட்டசபையில் 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் இன்று நடந்தது. இதில், உறுப்பினர்கள், பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பேசினர். அப்போது, மருத்துவம், மருத்துவக்கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ், அரசினர் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். நீட் நுழைவுத்தேர்வு இதன்படி, நீட் நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யும் வகையில், தமிழக சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. வெளிநடப்பு செய்தார். மற்ற கட்சிகள் இந்த அரசினர் தனித்தீர்மானத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித்தீர்மானம் சட்டசபையின் முடிவுக்கு விடப்பட்டது. மறுப்போரே இல்லை என்பதால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். 10 நிமிடங்கள் இந்த நிலையில், அவையில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கூறும்போது, சட்டப்பேரவையை தேவைப்பட்டால் மாலை நேரத்தில் கூட நடத்தலாம் என முடிவு எடுத்தோம். ஆனால், மாலை நேரத்தில் அவையை நடத்தினால் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்பதால், ஒரே அமர்வாக கூட்டம் நடத்தப்படுகிறது என்றார். வரும் திங்கள் முதல் உறுப்பினர்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே அனுமதி வழங்குவேன். நேரம் கடந்தால் அடுத்த உறுப்பினர்களை பேச அழைத்து விடுவேன். அதற்காக யாரும் கோபித்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/can-assembly-be-held-in-evening-speaker-jct-prabhakar-answers




