நடிகர் பிரபுதேவாவின் பரதநாட்டிய நடனத்தை பிரபல நடிகை பிரீத்தி சஞ்சீவ் விமர்சித்துள்ளார். சென்னை நாரத கான சபாவில் குரு ஸ்ரீ உடுப்பி லக்ஷ்மி நாராயணன் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரபல நடன கலைஞர் பிரபு தேவா கலந்து கொண்டு தனது குருவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக பரதநாட்டியம் ஆடினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. பெரும்பாலும் அவரது நடனத்துக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸுகளே வந்திருந்தது. பாரம்பரிய கலைக்கு இழைக்கப்படும் அநீதி இதனிடையே பிரபு தேவாவின் நடனத்தை விமர்சித்துள்ள நடிகை பிரீத்தி சஞ்சீவின் பதிவு தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பரத நாட்டியத்தை அவர் முறைப்படி ஆடவில்லை. பாரம்பரிய கலைகளை தவறாக ஆடினால் மக்கள் கேள்வி கேட்காமல் தொடர்ந்து பாராட்டுகிறார்கள். பிரபுதேவா போன்ற ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர் இப்படி மன்னிக்க முடியாத தவறை செய்வார் என நான் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை. இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்ததற்கு பதிலாக பரதநாட்டியத்தில் நன்கு பயிற்சி பெற்ற ஒரு இளம் நடனக் கலைஞருக்கு கொடுத்திருக்கலாம். அது அவருக்கு அங்கீகாரமாக இருந்திருக்கும்” என்றிருந்தார். இது நடன கலைஞர்கள் மத்தியில் விவாதமாக மாற பிரபு தேவாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/prabhu-deva-has-committed-an-unforgivable-mistake-actress-preethi-sanjeev




