முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு புகழஞ்சலி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் இறுதி நிகழ்வாக சோழிங்கநல்லூர் தொகுதியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ``எதிர்க்கட்சியாக இருக்கும்போது பொதுக்கூட்டம் நடத்துவது சவாலானது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வெறும் 100 நாட்களிலேயே மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த 100 நாள் ஆட்சியை மக்கள் சுறா படத்துடன் ஒப்பிட்டுச் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். முதல்வர் விஜய் 5 வருஷத்தில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு, வெறும் 100 நாட்களிலேயே மக்களுக்கு வந்துவிட்டது. இன்றைக்கு 100 நாள் ஆட்சியைக் கொண்டாடும் வேளையில், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை மக்கள் கழிவுநீர் அடைப்பு பிரச்னைக்காக முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும், திருவொற்றியூரில் பிளஸ் 1 மாணவன் தனுஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஆறுதல் கூறச் சென்ற இரண்டு அமைச்சர்களை பொதுமக்கள் துரத்தியடித்த சம்பவம் நடந்துள்ளது. இவை அனைத்துமே 100 நாள் ஆட்சியின் உண்மையான நிலைமையைக் காட்டுகிறது" என்றார். VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு Bytes முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/dmk-ma-subramanian-stated-public-developed-aversion-towards-tvk-government




