நெல்லை, நெல்லை வழியாக நாகர்கோவில் -கோயம்புத்தூர் இரவுநேர எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 22667 / 22668) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் பயணிகள் கோரிக்கையை ஏற்று இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந்தேதி வரை கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. இதையடுத்து இந்த ரெயிலில் 1 முதலாம் வகுப்புடன் இணைந்த இரண்ட டுக்கு ஏ.சி. பெட்டி, 1 ஏ.சி. இரண்டுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி கள், 14 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 பொது பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சரக்கு பெட்டி என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்த தகவலை தெற்கு ரெயில்வே முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/additional-coach-connection-on-nagercoil-coimbatore-express




