ஃபகத் ஃபாசில் நடித்திருக்கும் ஃபேண்டஸி திரைப்படமான 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு, மலையாளம் என இருமொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நேற்று (செப்.28) சென்னையில் நடைபெற்றது. இதில் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஃபஹத் பாசில், "நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன். படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி, ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப், மோகன், இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி. "இந்தப் படத்தை பார்க்கும் போது நான் அழுதேன்.'- 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்' படம் குறித்து ராஜமௌலி தயாரிப்பாளர் எஸ் எஸ் கார்த்திகேயாவிற்கு நன்றி. ஹைதராபாத்தில் ஒரு அரங்கத்தில் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். அடுத்த அரங்கத்தில் 'வாரணாசி' படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இரண்டிற்கும் அவர்தான் தயாரிப்பாளர். ஆனால் அவர் எப்போதும் எங்கள் படக் குழுவுடன் தான் இருப்பார். அதற்காக அவருக்கு நன்றி. ஃபகத் ஃபாசில் மிகவும் சிறப்பான படம். இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும். நண்பர்களுடனும். விருப்பத்திற்குரியவர்களுடனும். பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்கவும் வைக்கும், அழவும் வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம்'' என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/kollywood/fahadh-faasil-speech-about-dont-trouble-the-trouble-pre-release-event




