சென்னை, 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்? என மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 'வீ த லீடர்ஸ்' அமைப்பை தொடங்கியுள்ள அண்ணாமலை வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- கடந்த பல ஆண்டுகளாக, நாடு முழுவதும் மாணவர் சேர்க் கையில் ஒரு சீரான தன்மையைக் கொண்டு வந்ததாலும், பின்தங்கிய பின்னணி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி கனவை நனவாக்க வாய்ப்பை வழங்கியதாலும், 'நீட்' தேர்வை நான் தனிப்பட்ட முறையில் ஆதரித்து வந்துள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில், 'நீட்' இளங்கலை தேர்வு வினாத்தாள் 3 முறை கசிந்துள்ளது. சீரான தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அமைப்பே தோல்வியுற்ற நிலையில், இதற்கு காரணமானவர்களிடம் எந்தப் பொறுப்புக்கூறலும் இல்லை. போராட்டம் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்க பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது? போராட்டம் தீவிரமடைந்து ஒரு கொந்தளிப்பான நிலையை எட்டும் வரை, பேச்சுவார்த்தை ஏன் தாமதப்படுத்தப்பட்டது? ஒரு போராட்டம் வாரக்கணக்கில் நீடிக்கும்போது, சுயநல நோக்கங்களைக் கொண்டவர்கள் மேடையேறி, போராட்டத்தின் ஆரம்பகாலக் கோரிக்கைகளுக்கு தொடர்பில்லாத கருத்துகளை முன்வைப்பதோ அல்லது தங்கள் சொந்த நோக்கத்திற்காக போராட்டத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதோ இயல்பு. அத்தகைய சுயநலவாதிகள் தங்கள் நோக்கங்களை முன்னெடுக்க நீங்கள் மவுனம் காத்தால், உங்கள் முக்கிய நோக்கங்களிலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். போராடும் மாணவர்களுடன் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபடவும். தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/நீட்-வினாத்தாள்-கசிவு-பொறுப்புக்கூறல்-எங்கே-அண்ணாமலை-சாடல்




