ஐக்கிய நாடுகள் சபையில் (UN) நடைபெற்ற சர்வதேச உச்சி மாநாட்டில், தமிழர்களின் தொன்மையான கட்டடக்கலை, பொறியியல் நுணுக்கம் மற்றும் உலகளாவிய மனிதநேயச் சிந்தனைகளை எடுத்துரைத்து உரையாற்றிய சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் குமார் சந்தானத்திற்கு 'Global Change Maker Honour 2026' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி கட்டடத் துறை நிறுவனமான 'DAC Developers'-ன் மேலாண் இயக்குநரான சதீஷ் குமார் சந்தானம், ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற இரண்டாம் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். தாங்குதிறன், நிலைத்த வளர்ச்சி (Sustainable Development) மற்றும் மனித நல்வாழ்வு ஆகியவற்றை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த சர்வதேச மாநாட்டில், உலக நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பொறியாளர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பலரும் கலந்து கொண்டனர். சதீஷ் குமார் இந்த சர்வதேசச் சபையில் உரையாற்றிய சதீஷ் குமார் சந்தானம், காலநிலை மற்றும் பருவநிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, எதிர்கால சமூகங்களுக்கான நீடித்த வாழ்வியல் மற்றும் நிலையான சூழலை உருவாக்குவது குறித்த தனது முக்கிய சிந்தனைகளை முன்வைத்தார். அப்போது, பொதுநலனை மையமாகக் கொண்டு காலத்தைத் தாண்டி சேவை செய்யும் தமிழர்களின் பொறியியல் சிந்தனைக்குச் சான்றாக விளங்கும் 'கல்லணை' பற்றியும், அறிவியல் அறிவு, பொறியியல் நுணுக்கம் மற்றும் நிலைத்த கட்டடக்கலையின் ஒருங்கிணைந்த தமிழர் மரபின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் 'தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம்' (பெரிய கோயில்) பற்றியும் பெருமிதத்துடன் எடுத்துக்காட்டினார். அவர் மேற்கோள் காட்டிய தமிழரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கட்டடக்கலை மற்றும் பொறியியல் சாதனைகள், மாநாட்டில் பங்கேற்ற சர்வதேசப் பிரதிநிதிகள் அனைவரின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்தன. தனது உரையில், “யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற உலகை இணைக்கும் தமிழின் தொன்மையான மனிதநேயச் சிந்தனையை ஐ.நா., மன்றத்தில் மீண்டும் ஒலிக்கச் செய்தார். முன்னதாக, கடந்த 2007-ம் ஆண்டு ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட புகழ்பெற்ற உரையில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்த கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மேற்கோள் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. சதீஷ் குமார் மேலும், எதிர்கால உலகிற்கு அத்தியாவசியத் தேவைகளான நீர் பாதுகாப்பு, தூய்மையான ஆற்றல் (Clean Energy), உணவுப் பாதுகாப்பு, அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் இயற்கையுடன் இணைந்த நிலையான வாழ்வியல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் தனது உரையில் அவர் விரிவாக வலியுறுத்தினார். சர்வதேச அரங்கில் தமிழர்களின் கட்டடக்கலை மரபையும், நிலையான வளர்ச்சி குறித்த சிறப்பான பங்களிப்பையும் வெளிப்படுத்தியதற்காக, டாக்டர் ஜியோவானி ஜிங் அவர்களிடமிருந்து 'Global Change Maker Honour 2026' விருதை சதீஷ் குமார் சந்தானம் பெற்றுக் கொண்டார். உலக அரங்கில் தமிழின் தொன்மையான சிந்தனையும், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடப் பாரம்பரியமும் மீண்டும் ஒருமுறை ஓங்கி ஒலிக்கச் செய்தது பாரட்டத்தக்கது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group. இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும். வணக்கம், BIG BREAKINGS முதல். அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/trending/dac-developers-satish-kumar-participated-in-and-addressed-the-summit-held-at-the-united-nations



