திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமி விழா நடந்தது. அதையொட்டி உற்சவர் மலையப்ப சுவாமி தங்கக்கருட வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட பஞ்சமி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கருட பஞ்சமி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அன்று புதுமண தம்பதிகள் தங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டியும், பெண்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகள் கருடனை போல் வலிமையோடும், சிறந்த குணநலன்களுடன் பிறக்கவேண்டும் என்றும் கருதி கருட பஞ்சமி அன்று சிறப்புப்பூஜைகளை செய்வது வழக்கம். அதன்படி நேற்று ஏழுமலையான் கோவிலில் கருட பஞ்சமி உற்சவம் கோலாகலமாக நடந்தது. அதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். மலையப்பசாமி வீதிஉலா கோவிலில் இருந்து வெளியே வந்ததும் எதிரே அகிலாண்டத்தில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் அங்குள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை உற்சவர் மலையப்ப சுவாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் ‘கோவிந்தா. கோவிந்தா.’ எனப் பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர். கருட வாகன வீதி உலாவில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/devotional/garuda-panchami-utsavam-malayappa-swamy-celestial-procession-on-garuda-vahana




