சென்னை, மதுராந்தகம் தொகுதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு, வருகிற செவ்வாய்க்கிழமை (6-ந் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களின் அதிரடி பிரசாரத்தால், இரு தொகுதிகளும் களைகட்டியுள்ளது. இதற்கிடையில் த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த 25-ம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது இடைத்தேர்தலில் தீய சக்திக்கும், மற்றும் பலருக்கும் நீங்கள் சரியான ஒரு பாடம் புகட்ட வேண்டும் என விஜய் பேசினார். 4 மணி நேரம் ரோடு ஷோ இந்த நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் நாளை (வெள்ளிக்கிழமை) பிரசாரம் செய்ய உள்ளார். முதலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்ய உள்ளதாகவும் பின்னர் பங்காரு அடிகளார் நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் சுமார் 45 கி.மீ. தூரம் முதல்-அமைச்சர் விஜய் ரோடு ஷோ செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விஜய் ரோடு ஷோ செல்ல உள்ளதாகவும், மாமண்டூர், படாளம் கூட்ரோடு, கருங்குழி அய்யனார் கோவில், சவரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 5 கி.மீ-க்கு ஒரு எம்.எல்.ஏ. என ஏற்பாடுகளை செய்ய தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று பிரசாரம் மேற்கொள்கின்றனர். பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ பங்கேற்று வாக்கு சேகரிக்க உள்ளார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-campaign-in-maduranthakam-constituency-tomorrow




