சேலம், சென்னை மாமல்லபுரம் அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தென்மாநில முதல்-மந்திரிகள் மாநாடு மற்றும் தென்மண்டல குழு கூட்டம் நேற்று நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய், கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர் பங்கீடு விவகாரம் மற்றும் மேகதாதுவில் அணை கட்டுவதல் தமிழகம், கர்நாடகாவில் நிலவும் இருமாநில பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசினன் ஜல் சக்தி திட்டத்தின் கூடுதல் செயலாளரும், மத்திய நீர்வள ஆணைய உறுப்பினருமான யோகேஷ் பைத்தங்கர் மேட்டூர் அணைக்கு வந்தார். பின்னர் அவர் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்தின் மீது சென்று அணையை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் தற்போது உள்ள நீர் மட்டம் எவ்வளவு? அணைக்கு வரும் நீரின் அளவு மற்றும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் உள்ளிட்டவை குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதையடுத்து மத்திய நீர்வள ஆணைய உறுப்பினர் யோகேஷ் பைத்தங்கர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து அவர் நாளை காலை கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதாக கூறப்படும் இடத்தை பார்வையிடலாம் என்று திட்டம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுபற்றிய விவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/central-water-commission-member-inspects-mettur-dam




