மும்பை, மராட்டிய மாநிலத்தில் வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்தனர். மராட்டிய மாநிலம் மும்பை சிட்டி மாவட்டம் தாராவி நகரில் உள்ள 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. சிலிண்டர் வெடித்து விபத்து இதில், ஒரு குடும்பம் வசித்து வரும் வீட்டின் சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில் வீட்டில் தீப்பற்றியது. இந்த விபத்தில் வீட்டில் இருந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த கியாஸ் சிலிண்டர் வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/maharashtra-four-injured-in-gas-cylinder-blast-at-home




