காலே இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில், காலே நகரில் கடந்த 15-ந்தேதி தொடங்கி நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. முதல் நாள் ஆட்டம் இதன்படி முதல் நாளில் தேவ்தத் படிக்கல், 134 பந்துகளில் சதம் விளாசினார். ஆட்டம் மழையால் இடையிடையே பாதிக்கப்பட்டது. இந்தியா 73 ஓவர்களில் 288 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்தபோது, முதல் நாளில் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 2-வது நாள் மழை பாதிப்பு 2-வது நாளில் மழை பெரும் இடையூறாக அமைந்தது. தொடர் மழை காரணமாக ஆட்டம் சுமார் 5 மணி நேர தாமதத்துக்கு பிறகு பிற்பகல் 2.35 மணிக்கே தொடங்கியது. இதனால் இரண்டாவது நாளில் குறைந்த ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. இதனால், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 116 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 460 ரன்களை எடுத்திருந்தது. இன்றைய ஆட்டம் இதன்பின்னர் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில், படிக்கல் அதிரடியாக விளையாடி 167 ரன்களை குவித்து வெளியேறினார். துருவ் ஜுரெல் அரை சதம் (51) விளாசினார். பண்ட் (39), ரவீந்திர ஜடேஜா (13), மனவ் சுதர் (24), முகமது சிராஜ் (11), பிரசித் கிருஷ்ணா (2) ரன்களில் ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். 10 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 462 ரன்களை இந்தியா குவித்தது. இலங்கை பேட்டிங் இலங்கை தரப்பில், பிரபாத் ஜெயசூர்யா (4 விக்கெட்டுகள்), கேஷரா நுவந்த (3 விக்கெட்டுகள்), அசிதா பெர்னாண்டோ (2 விக்கெட்டுகள்) கைப்பற்றினர். இதனை தொடர்ந்து இலங்கை அணி முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய நிஷான் பெர்னாண்டோ, முதல் ஓவரின் 2-வது பந்தில், படிக்கல்லிடம் கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார். லஹிரு உடாரா 6 பவுண்டரிகளுடன் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதற்கு அடுத்து விளையாடிய தினேஷ் (4), மென்டிஸ் (14) மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா (21) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், உணவு இடைவேளையில் 99 ரன்கள் எடுத்திருந்தபோது இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. எனினும், தினுஷா மற்றும் நிரோஷன் நிலைத்து விளையாடி வருகின்றனர். இதனால், 40 ஓவரில் இலங்கை 141 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/first-test-against-india-lunch-break-sri-lanka-99-5




