தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே இரண்டு கிராம மக்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதல் மற்றும் கல்வீச்சு தாக்குதலில் பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர். இரண்டு கிராம மக்களிடையே இடப்பிரச்சினை தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. லெக்கம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடம் தொடர்பாக இந்த இரு கிராமங்களை சேர்ந்தவர்களிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் இந்த நிலையில் நேற்று இரவு பிரச்சினைக்குரிய அந்த இடத்தில் லெக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த சில இளைஞர்களும் வந்துள்ளனர். அவர்களும் அதே இடத்தில் விளையாடத் தொடங்கினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 13 பேர் காயம் வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி கற்களை வீசி தாக்கினர். இதில் லெக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த காசி மகன் அழகர்சாமி, ராமமூர்த்தி மனைவி பழனிதேவி (வயது 50), மாயழகு மகன் அழகுபாண்டி(24), கோபால் மகன் ராமகிருஷ்ணன்(19), தனுஷ்கோடி மகன் ராமர்(45), முருகன் மகன் ஆனந்தகுமார் (25), ஊமைத்துரை மகன் கோவிந்தராஜ்(33), ராமகிருஷ்ணன் மனைவி துளசியம்மாள்(53), பஞ்சவர்ணம், முத்துலட்சுமி, தினேஷ்குமார், முனியம்மாள், ஸ்ரீராம் உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர். 8 பேர் காயம் இதேபோல இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராக்கம்மாள்(54), முத்துகனி(37), முத்துமாரி(55), திருமால்அம்மாள்(52), செல்வி(50), சீதாலெட்சுமி(38), அனந்தம்மாள்(47) உள்பட 8 பேர் காயத்துடன் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 போலீசார் காயம் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்தவும், மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசார் மீதும் சிலர் கற்களை வீசி தாக்கினர். இதில் கோபால், மலையரசன், முத்தமிழரசன் ஆகிய 3 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்களுக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் குவிப்பு இரு கிராமங்களுக்கிடையே ஏற்கனவே இருந்து வந்த இடப்பிரச்சினை காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து லெக்கம்பட்டி மற்றும் இலந்தைகுளம் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/இடப்பிரச்சினையில்-கிராம-மக்கள்-கோஷ்டி-மோதல்-பெண்கள்-உள்பட-21-பேர்-படுகாயம்-போலீஸ்-குவிப்பு




