புதுடெல்லி, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந்தேதி, டெல்லியில் உள்ள துக்லகாபாத் கோட்டை அருகே இருக்கும் வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தின் தலை முற்றிலுமாக கல்லால் அடித்து சிதைக்கப்பட்டிருந்தது. அந்த உடல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, உயிரிழந்தவரின் பெயர் அன்சாரி என்பதும், அவர் பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் அன்சாரி 2001-ம் ஆண்டு தனது உறவினரான பிரோஜ் என்பவருடன் டெல்லிக்கு வந்துள்ளார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. ஆனால் பிரோஜ் எங்கு சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அன்சாரியின் கொலை வழக்கில் எந்த ஆதாரமும் போலீசாருக்கு கிடைக்காததால், அந்த வழக்கு முடிவு பெறாமல் தொடர்ந்து நிலுவையில் இருந்து வந்தது. இதனிடையே, தீர்க்கப்படாமல் இருக்கும் பழைய வழக்குகளின் கோப்புகளை டெல்லி போலீசார் மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, அன்சாரி கொலை வழக்கு போலீசாரின் கண்ணில் பட்டது. அந்த வழக்கில் பிரோஜ் என்ற நபர் மாயமாகி உள்ளார் என்பதை அறிந்த போலீசார், அவர் தற்போது எங்கு இருக்கிறார் என தேடத் தொடங்கினர். டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2 மாதங்களில் பீகார் மாநிலத்திற்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட முறை பயணம் செய்து, பழைய கோப்புகளை ஆய்வு செய்து, உள்ளூர் மக்களிடம் தகவல்களை கேட்டுப் பெற்று, இறுதியாக பிரோஜ் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அவர் தற்போது அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார் என்பதும், அவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்நிலையில், குருகிராம் சென்று பிரோஜ் வேலை செய்யும் தொழிற்சாலையில் விசாரணை நடத்திய போலீசார், அவரது அடையாளங்களை உறுதி செய்து அவரை கைது செய்தனர். பின்னர் பிரோஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2002-ம் ஆண்டு அன்சாரியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். பிரோஜ் மற்றும் அன்சாரி ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே தகராறு இருந்து வந்த நிலையில், பழைய பகைக்கு பழிதீர்க்கும் நோக்கில், திட்டமிட்டு அன்சாரியை துக்லகாபாத் கோட்டை அருகே அழைத்துச் சென்று கொலை செய்ததாக போலீசாரிடம் பிரோஜ் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரோஜ் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதன் மூலம் 24 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்த கொலை வழக்கில் டெல்லி போலீசார் தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/murder-committed-in-2002-delhi-police-arrest-the-culprit-after-24-years




