பெங்களூரு, துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் மத்திய மண்டல அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிழக்கு மண்டல அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 266 ரன்கள் துலீப் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - மத்திய மண்டல அணிகள் மோதின. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கிழக்கு மண்டல அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டல அணி 80.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் ரிங்கு சிங் 60 ரன்களும், ஆர்யன் ஜூயல் 46 ரன்களும் எடுத்தனர். ஸ்கோர் சமநிலை இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கிழக்கு மண்டல அணியும் 57 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 81 பந்துகளில் 92 ரன்கள் விளாசி அசத்தினார். அபிமன்யு ஈஸ்வரன் 69 ரன்கள் எடுத்தார். இதனால் இரு அணிகளின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரும் சமநிலையில் முடிந்தது. 159 ரன்கள் இலக்கு பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய மண்டல அணி, கிழக்கு மண்டல அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 50.2 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் கிழக்கு மண்டல அணிக்கு வெற்றி பெற 159 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இறுதிப்போட்டிக்கு தகுதி இந்த இலக்கை துரத்திய கிழக்கு மண்டல அணி, 39.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்சி 40 ரன்களும் இஷான் கிஷன் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் மத்திய மண்டல அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கிழக்கு மண்டல அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு துலீப் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. கிழக்கு மண்டலம் கடைசியாக 2012-ல் துலீப் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/duleep-trophy-east-zone-enter-final-after-14-years




