நாமக்கல், ஒடிசா மாநிலம் நாகராங்பூர் மாவட்டம், ராங்கர் பகுதியை சேர்ந்தவர் முணாகோண்ட். இவரது மனைவி சுனிதா கோண்ட் (25 வயது). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்ன தளிகையில் உள்ள கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். இதனிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. கடந்த 10-ந்தேதி முணாகோண்ட் மது அருந்திவிட்டு வந்ததால் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முணாகோண்ட் வீட்டுக்கு வெளியே ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்ட சுனிதா கோண்ட் அதேபகுதியில் உள்ள உறவினர் ஜிதேந்தர் கோண்ட் என்பவரது வீட்டில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் நேற்று காலை சுனிதா கோண்ட் வீட்டில் உள்ள கம்பியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜிதேந்தர் கோண்ட் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சுனிதா கோண்ட் ஏற்கனவே இறந்து விட் டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த துக்கத்தில் 17-வது நாளில் மனைவியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/young-woman-dies-by-suicide-in-grief-over-husbands-death




