சென்னை, சென்னையில் விசிக சார்பில் விருதுகள் வழங்கும் விழா நிகழ்ச்சியில் தொல். திருமாவளவன் பேசியதாவது:- திமுக கூட்டணியில் இருந்தபோது, முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அம்பேத்கரின் நூலை வெளியிட்டபோது நான் எங்கு இருந்தாலும் எனது உள்ளம் அங்கேயே இருக்கும் என்று குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்பே எத்தனையோ ஆசை வார்த்தைகள் வந்தபோதும், 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பலவீனப்பட ஒருபோதும் இடம் தர மாட்டேன்' என்பதில் உறுதியாக இருந்தேன். தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முன்பே திமுக தலைமைக்குத் தகவல் கொடுத்தேன். திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இல்லை என்று திமுக தலைமையை அறிவித்து விட்டது. நான் கூறவில்லை. இதுவரையிலும் திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நான் ஒருபோதும் கூறியதில்லை. தவெக அமைச்சரவையில் விசிகவுக்கு இடம் ஒதுக்கிய போதே திமுக தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி இணைத்தபோது திமுக தலைமை சொல்லுகிறது விசிக எங்களுக்கு உறவில்லை என்று கூறினார்கள். இதுவரை நான் கூறவில்லை. திமுக கூட்டணியில் விசிக இல்லை என்று கூறியது முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். நான் அந்த நட்பை ஒருபோதும் சிதைக்கவில்லை. எனது மதிப்புக்குரியவர் மீதான மதிப்பு என்றைக்கும் குறையாது. திமுகவுக்கு நான் துரோகம் இழைத்தேனா? என் நட்பு எவ்வளவு தூய்மையானது என அனைவருக்கும் தெரியும். அதே போல் தமிழக வெற்றி கழக கூட்டணியில் இணைகிறோமா என்ற கேள்விக்கும் நான் பதில் அளிக்கவில்லை முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளது. புதிய கூட்டணிகள் உருவாக்குவது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம் இன்னும் அங்கு எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அங்கு இடம்பெறுவோம். இதனை தெரிவிப்பதற்கு எனக்கு எந்த ஐயமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/who-said-that-vkc-is-not-in-the-dmk-alliance-thirumavalavan-questions




