இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தி பாரடைஸ்' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது. The Paradise Movie திரைப்படம் வெளியான நாள் முதல், எதிர்மறையான விமர்சனங்களையே இப்படம் பெற்று வருகிறது. படத்திற்குக் கிடைத்து வரும் விமர்சனங்கள் தொடர்பாக நடிகர் நானி ஒரு பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "உங்கள் அனைவரின் எதிர்வினைகளையும் பதில்களையும் நான் பார்த்தேன். நீங்கள் பொழிந்த அன்பைப் பெற்றுக்கொண்டது போலவே, நீங்கள் செய்த நகைச்சுவையான ட்ரோல்களையும் அதே அளவு ரசித்தேன். பார்வையாளர்கள் இப்படத்தைத் தங்கள் சொந்தப் படமாகவே கொண்டாடிய விதம் என் நெஞ்சை நெகிழ வைத்திருக்கிறது. அதேவேளையில், விமர்சகர்களும் மதிப்பாய்வாளர்களும் சுட்டிக்காட்டிய குறைகளில் இருந்தும் கற்றுக்கொண்டேன். Nani - The Paradise உங்கள் அனைவருக்கும் ‘நன்றி’ என்பதைத் தவிர வேறு எதுவும் என்னால் சொல்ல முடியாது. உங்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருவதற்காகவே, அளப்பரிய உழைப்பையும் வியர்வையையும் சிந்தி 'தி பாரடைஸ்' திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். அதை உடைமையாக்கிக் கொண்டாடுவதும் விமர்சிப்பதும் முற்றிலும் உங்களுடையதே. இந்தப் படத்தின் மீது நீங்கள் கொண்டிருந்த ஆர்வமும், என் மீது நீங்கள் காட்டிய அன்பும் என் மனதை அளப்பரிய நன்றியால் நிரப்பியுள்ளது" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப் சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள. உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://cinema.vikatan.com/tollywood/nani-responds-to-trolls-and-criticism-the-paradise-movie




