செங்கல்பட்டு, தமிழக முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நாளை ரோடு ஷோ நடத்த உள்ளார். அவரது ரோடு ஷோ நடைபெற இருக்கும் வழித்தடம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர், அமைச்சர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் நாளை மதியம் 2.30 மணி அளவில் மாமண்டூரில் தொடங்கி சாலை வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு, மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்காக பொதுமக்களிடையே விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கின்றார். அவரது ரோடு ஷோ பின்வரும் வழித்தடத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. மாமண்டூர் புக்கத்துறை சந்திப்பு படாளம் சந்திப்பு ஜானகிபுரம் சந்திப்பு மேலவலம்பேட்டை சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, கருங்குழி பேரூராட்சி அலுவலகம், மதுராந்தகம் North By Pass Entrance, மதுராந்தகம் South By Pass, அய்யனார் கோவில் சந்திப்பு, மோச்சேரி, தண்டலம், பெரும்பாக்கம், கிளியாநகர், செம்பூண்டி, கீழாமூர், பசுவங்கரணை, ராமாபுரம், மோகல்வாடி, எலப்பாக்கம், பொற்பணங்கரணை, அணைக்குன்றம், கீழ்அத்திவாக்கம், மின்னல் சித்தாமூர், பெரும்பேர்கண்டிகை, கடமலைப்புத்தூர், தென்பாக்கம் சந்திப்பு, சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் சந்திப்பு, சரவம்பாக்கம், பெருவெளி, முதுகரை, வில்லவராயநல்லூர், மாம்பாக்கம், மதுராந்தகம் காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக யாரும் வாகங்களை நிறுத்துவதோ அல்லது வந்து செல்வதோ, கண்டிப்பாகக் கூடாது. தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவரின் மதுராந்தகம் தொகுதி சாலைவலத்தின்போது, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கண்டிப்பாக அனுமதியில்லை. இந்த சாலை வலத்தில் கலந்துகொள்ள உள்ளவர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் சாலை வலத்தில் கலந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளவர்கள் அனைவரும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, சமூக வலைத்தள நேரலைகளில் கண்டு, சாலைவலம் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-to-hold-road-show-in-maduranthakam-tomorrow-route-map-released




