புதுடெல்லி இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவில்லை என்றால் வருகிற 10-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார். நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்.) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் வரை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். உரிய முறைகளின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. எனினும், இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார், மற்ற இரு கமிஷனர்களின் ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாமல் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் தன்னிச்சையாக செயல்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் பதவி விலகக்கோரி, நேற்று காந்தி ஜெயந்தி தினத்தில், மராட்டியத்தின் மும்பை சிவாஜி பார்க்கில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு மரியாதை செலுத்தி, அகிம்சை வழியில் இந்த போராட்டம் நடைபெற்றது. பிரபலங்கள் பங்கேற்பு போராட்டத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜீத் திப்கே தலைமை தாங்கினார். அவருக்கு ஆதரவாக, நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் வந்திருந்தனர். இதன்படி, நடிகர் நசிருதீன் ஷா, நடிகை ஷபானா ஆஸ்மி, பிரபல திரைப்பட இயக்குனர்கள் விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா, பிரபல இசையமைப்பாளர் விஷால் தத்லானி மற்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த மும்பை போலீசார், தாதர் மற்றும் சேனா பவன் பகுதிகளில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை முழுமையாக முடக்கினர். தாதர் ரெயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான ரிசர்வ் படை போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்ட அறிவிப்பு மும்பை சிவாஜி பார்க்கில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அபிஜீத் திப்கே நேற்றிரவு எக்ஸ் சமூக ஊடகத்தில், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன்படி, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் உடனடியாக பதவி விலக வேண்டும். அப்படி இல்லையென்றால் வருகிற 10-ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் புதிதாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள கட்சியினர் டெல்லிக்கு பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம். அது அமைதியான முறையில் நடத்தப்படும். சுதந்திர மற்றும் வெளிப்படையான தேர்தல் வேண்டும் என விரும்பும் ஒவ்வொரு குடிமகனும் அதில் இணைந்து கொள்ளலாம் என தெரிவித்து உள்ளார். மும்பையில் போலீசார் அனுமதி அளிக்காதபோதும், கடும் வெயில் மற்றும் தடுப்பான்களை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு, நேற்றைய போராட்டத்தில் இளம்பெண்கள், வாலிபர்கள் என திரளானோர் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். அப்போது அக்கட்சியின் தலைவர் அஜிங்கியா ஷிண்டே கூறும்போது, ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/india/dipke-announces-protest-on-the-10th-demanding-the-resignation-of-the-chief-election-commissioner




