சென்னை, வரலாற்றுப் பெருமைமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். குடமுழுக்கு விழா இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில், உலகத் தமிழர்களின் பெருமையாகத் திகழும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சகணக்கான பக்தர்களும், அனைத்துத் தரப்பு மக்களும் மனநிறைவுடன் பங்கேற்று, இறைவனை தரிசித்து மகிழ்ந்து வருகின்றனர் என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் நன்றிகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருப்பணியை சிறப்பாக நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்கள், அறங்காவலர்கள், திருப்பணிக்கு பங்களித்த நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வாரமாக தமிழ் பக்திப் பதிகங்களை இசைத்து, ஒவ்வொரு கோபுரத்தின் உச்சியிலும் தமிழின் இனிமையை முழங்கச் செய்து, குடமுழுக்கு விழாவில் சிறப்பாகப் பங்கேற்ற ஓதுவார்கள் மற்றும் சைவ ஆதீனங்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டிற்கே பெருமை வரலாற்றுப் பெருமைமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா சிறப்பாக நிறைவேறியது தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இறையருளால் அனைவரது வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி, வளம் பெருகட்டும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-successful-conduct-of-the-consecration-ceremony-is-a-matter-of-pride-for-tamil-nadu-minister-ramesh




